தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இளவரசர் சார்லசுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை!

இளவரசர் சார்லசுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை!

இளவரசர் சார்லசுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை!


PUBLISHED ON : மார் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.ஐ.பி.,கள் பலர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்தந்த நாடுகளின், பாரம்பரிய நடனங்களை ஆடுவர். சமீபத்தில், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அவரை வரவேற்கும் வகையில், அந்நாட்டின், பாரம்பரிய நடனமான வாள் ஏந்தி நடனமாடும் நிகழ்ச்சி நடந்தது. கூர்மையான வாளை, கையில் ஏந்தி, கலைஞர்கள் நடனமாடினர். இதற்கு, கடுமையான பயிற்சி அவசியம். பயிற்சி இல்லாமல், நடனமாடினால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சார்லசுக்கும், வாள் ஏந்தி நடனமாடும் ஆசை வந்து விட்டது. உடனடியாக களத்தில் இறங்கி விட்டார். பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல், சிறிது நேரம், வாளை ஏந்தி நடனமாடி விட்டுத் தான், இருக்கைக்கு திரும்பினார். இதன்பின் தான், சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு மூச்சே வந்தது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us