PUBLISHED ON : மார் 09, 2014

அ நிறம் | அளவு
ஓவியங்கள் வரைவதற்கு தூரிகை என அழைக்கப்படும், பிரஷ் அவசியம். ஆனால், பிரஷ் இல்லாமல், விரல்களை மட்டுமே பயன்படுத்தி, காண்போரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்ளும் வகையிலான ஓவியங்களை வரைந்து, சாதனை புரிந்துள்ளார், அமெரிக்காவைச் சேர்ந்த, ஜாரியா போர்மென் என்ற இளம் பெண். கடல், அலை, நீர்வீழ்ச்சி, வனம், ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைத் தொடர் என, இவரின் விரல் ஜாலத்தில் உருவான ஓவியங்கள், பிரமிக்க வைக்கின்றன. 'இது, எப்படி சாத்தியமாயிற்று...' என, அவரிடம் கேட்டபோது, 'சித்திரமும் கை பழக்கம் என்பார்களே, என் விஷயத்தில், அது உண்மையாகி விட்டது. குழந்தை பருவத்தில் இருந்தே, விரல்களால் ஓவியங்களை வரைந்து பழகினேன். இப்போது, எனக்கு, அது சர்வ சாதாரணமாகி விட்டது...' என்கிறார், ஜாரியா.
— ஜோல்னாபையன்.
