அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்!
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்!
PUBLISHED ON : மே 06, 2012

இளவரசி கதே வில்லியம், பிரிட்டனில் உள்ள இளம் பெண்களின் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார். தன் மாமியாரும், மறைந்த இளவரசியுமான டயானாவை போல், கதே அணியும் உடைகளும், அவர் அணியும் அணிகலன் களும், பிரிட்டனில் பிரபலமாகி விடுகின்றன.
கதேயின் பேஷனை, பிரிட்டன் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் பின்பற்றத் துவங்கி விட்டனர். இளவரசர் சார்லசின் இளைய சகோதரர் ஆண்ட்ரூவின் மகளும், இளவரசியுமான பெட்ரைஸ், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் போது, தன் அண்ணி கதே அணிவதைப் போன்ற உடைகளை அணியத் துவங்கி விட்டார்.
சமீபத்தில் யார்க் மினிஸ்டரில் நடந்த ஒரு விழாவில், தன் பாட்டியும், பிரிட்டன் ராணியுமான எலிசபெத்துடன் கலந்து கொண்டார், பெட்ரைஸ். காரில் இருந்து, அவர் இறங்கி யதை பார்த்த, பிரிட்டன் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதற்கு முன், ஒரு விழாவில் பங்கேற்பதற்காக, கதே அங்கு வந்தபோது, எந்த உடையை அணிந்திருந்தாரோ, அதே போல் உடையை அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்தார் பெட்ரைஸ். நேவி புளூ கோட், முழங்காலுக்கு சற்று மேல் வரை தெரியும் வகையிலான கவுன், வித்தியாசமான தொப்பி என, கதே அணிந்தது போன்ற உடையை அணிந்திருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டால், 'பேஷன் விவகாரங்களில் என் அண்ணி தான், எனக்கு குரு. இது பெருமைக்குரிய விஷயம் தானே...' என்றார். ஒரு போனஸ் தகவல். இந்த விழாவில் பெட்ரைஸ் அணிந்திருந்த தொப்பியின் விலை, 30 ஆயிரம் ரூபாய். அப்படியானால், அவர் அணிந்திருந்த உடை எத்தனை ரூபாய் என்று கேட்க தோன்றுகிறதா? அதெல்லாம் மன்னர் குடும்பத்து விவகாரம்.
— ஜோல்னா பையன்.
