
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக - கேரள எல்லையில் உள்ள மலைப்பிரதேசம் இடுக்கி. இம்மலைப் பாதைகளில், ஆம்புலன்சை ஓட்டிச் செல்கிறார் பிஜி என்ற பெண்மணி. இவர் கணவர், பென்னி உலகன்னான் பாதிரியாராக உள்ளார். உற்றார், உறவினர் இன்றி, முதுமையில் தவிக்கும் ஏழைகளை பராமரிக்க, அனாதை இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார் பிஜி. ஏழைகளுக்கு உதவும் இவருக்கு, ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசளித்தார் ஒருவர்.
ஆரம்ப காலத்தில், விடுதியில் தங்கியுள்ளவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய ஆம்புலன்ஸ், தற்போது, மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவர்களை போன்ற மனிதநேயம் மிக்க மனிதர்களை பாராட்டாமல் இருக்க முடியுமா?
— ஜோல்னாபையன்.

