sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 11, 2022

Google News

PUBLISHED ON : செப் 11, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

நான், 21 வயது பெண். எங்கள் வீட்டில் காலம் காலமாக சொந்தத்திற்குள் மட்டுமே திருமணம் செய்கின்றனர். இப்போது, எனக்கும், மாமன் மகனிற்கும் திருமணம் செய்ய பேச்சு நடக்கிறது.

என்னை விட வயதில் ஒரு ஆண்டு மட்டுமே மூத்தவர். அவரின் அம்மாவும், அப்பாவும் குடும்ப தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள். அவரின் அப்பா, இதுவரைக்கும் உருப்படியாக சம்பாதித்து வீட்டிற்கு கொடுத்ததில்லை. அவரது அம்மா, வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை; ஊரில் நடக்கும் நல்லது, கெட்டது எதிலும் பங்கேற்பதில்லை.

மாமன் மகனுடன் பிறந்த இருவரும் மாற்றுத்திறனாளிகள். என் அத்தைக்கும், மாமாவுக்கும் சொந்த வீடும் இல்லை.

சிறு வயதிலிருந்தே நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வாழ்கிறோம். இப்போது என் பிரச்னை, ஆரம்பத்தில் என்னிடம், மாமன் மகனை திருமணம் செய்ய சம்மதமா என கேட்டபோது, அவரின் வீட்டு நிலைமையை பார்த்து, சம்மதம் கூறினேன்.

அடுத்தபடியாக திருமண பொருத்தம் பார்த்ததில், எங்கள் இருவரின் ஜாதகமும் பொருந்தவில்லை; மீறி திருமணம் செய்தால், மணப்பெண் இறந்து விடுவாள் என கூறினார், ஜோதிடர்.

இரண்டு மூன்று ஜோதிடர்களிடம் கேட்ட போதும், அனைவரும் ஒரே மாதிரி கூறினர்.

என் அம்மாவிற்கு ஆரம்பத்திலிருந்தே இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. என் அப்பா பேச்சை மீற முடியாமல் அரை மனதாக சம்மதித்தார். ஜாதகம் பொருந்தாததால், வீட்டில் அனைவரும் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.

என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், ஜாதகத்தை நம்ப வேண்டாம் என கூறினார், மாமன் மகன்.

என் அப்பா மட்டுமே அவரின் உணர்வுக்கு மதிப்பளித்து, அனைவரையும் மீறி திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.

'பொருத்தம் இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். சொந்தத்தில் திருமணம் செய்ததால் தான், அந்த பையனின் உடன் பிறந்தவர்கள், மாற்றுத்திறனாளியாக இருக்கின்றனர். நீங்களும் அதே தவறை பண்ணாதீங்க...' என்கின்றனர், ஊர்க்காரர்கள்.

யார் சொல்வதையும் காதில் வாங்காமல், அப்பாவும், மாமன் மகனும் திருமணத்தில் உறுதியாக இருக்கின்றனர். இப்போது நான் என்ன செய்வது...

மாமா மகன், என்னிடமும், என் வீட்டில் இருப்பவர்களிடமும் இனிமையாக பேசுவார். ஆனால், அவர் வீட்டில் இருப்பவர்களிடம் எப்போதும் எரிந்து விழுவார். என் வீட்டை பொறுத்தவரை, அவர், தாராள செலவாளி. ஆனால், அவர் வீட்டில், கஞ்சனாக இருப்பார்.

என்னை திருமணம் செய்யவே, அவர் எங்களிடம் இனிமையாக நடந்து கொள்கிறார். அவர் நினைத்தது முடிந்தவுடன், என்னிடமும் எரிந்து விழுவார் என்று தோன்றுகிறது.

அவருக்கு சரியான வேலை இல்லை. தினகூலிக்கு யாராவது அழைத்தால் செல்வார்.

என்னால், அப்பாவையும் மீற முடியாது. இந்த திருமணத்தை நான் ஏற்பதா, வேண்டாமா. ஒரு நல்ல முடிவை விரைவில் சொல்லுங்கள், அம்மா.

இப்படிக்கு

உதய தீபா


அன்பு மகளுக்கு —

நீ என்ன படித்திருக்கிறாய் என்பதை, கடிதத்தில் குறிப்பிடவில்லை.

நீ ஏன் உன் மாமன் மகனை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்கான உண்மைகளை பட்டியலிடுகிறேன்...

* மாமா எந்த வேலைக்கும் செல்லாத வாழைப்பழ சோம்பேறி

* ஊரில் நடக்கும் எந்த நல்லது கெட்டதுக்கும் மாமா - அத்தை செல்வதில்லை

* மாமா - அத்தைக்கு சொந்த வீடு இல்லை

* மாமன் மகனின் இரு உடன்பிறந்தோர் மாற்றுத்திறனாளிகள்; காரணம் நெருங்கிய உறவில் திருமணம்

* மாமனுடன் திருமணம் நடந்தால் நீ அகால மரணமடைவாய் என, ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்

* மாமனை போலவே மாமன் மகனும் வேலைக்கு செல்லாதவன்

* எல்லாரிடமும் எரித்து விழும் மாமன் மகன், உன்னிடம் இனிப்பாய் பேசுவது நாடகம்.

அப்பாவுக்கும், உன் மாமன் மகனுக்கும் ஏதோ ரகசிய கொடுக்கல் வாங்கல் இருக்கலாம். உன் அப்பாவின் விருப்பத்துக்காக கொடிய பாம்புகள் நிறைந்த பாழும் கிணற்றில் விழாதே.

நீ செய்ய வேண்டியது என்ன?



* அத்தை, மாமன், மாமன் மகன் மற்றும் உன் அப்பா என, நால்வரையும் தனித்தனியாக சந்தித்து, இந்த திருமணத்தில் உனக்கு துளியும் உடன்பாடில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறு

* வேலைக்கு போ அல்லது மேற்படிப்பு படிக்கப் போ

* கட்டாயத் திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டனர் என்றால், திட்டம் இடுபவர்களின் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடு. சம்பந்தபட்டவர்களிடம் காவல்துறை எழுதி வாங்கும்

* மாமன் மகனிடம், 'நீ வேலைக்கு போகாமல் வீட்டுலேயே இருந்தால், ஒருத்தியும் உன்னை கட்டிக்க முன் வரமாட்டாள். வேலைக்கு போ. நாமிருவருமே அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, வெவ்வேறு நபரை திருமணம் செய்து கொள்வோம். நம்மிருவர் வாழ்க்கையும் சோபிக்கும்...' எனக் கூறு

* உனக்கு, 25 வயதானவுடன் திருமணம் செய்து கொள். அதுவரை உன் வாழ்க்கையை சகலவிதங்களிலும் மேன்மைபடுத்து.

ஒளிமயமான உன் எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்







      Dinamalar
      Follow us