sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 09, 2011

Google News

PUBLISHED ON : அக் 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது 24. நான் ராமனாகவும், எனக்கு வரப் போகும் மனைவி சீதையாகவும் வாழ வேண்டும் என்ற லட்சியம் உள்ளவன் நான். ஒழுக்கமும், நேர்மையும் என் உயிர்மூச்சு.

இளங்கலை ரசாயனம் படித்து முடித்து, ஒரு தனியார் நிறுவனத்தில் பணி சேர்ந்தேன். நான் பணி சேர்ந்த ஒரு மாதத்தில், ஒரு முஸ்லிம் பெண் வேலைக்கு சேர்ந்தாள். முதலில், அவள் தான் என்னிடம் பேசினாள். என்ன பேசுகிறாளோ அதற்கு மட்டும் பதில் கொடுப்பேன். ஒருநாள் அவளும் பேசவில்லை, நானும் பேசவில்லை. மறுநாள், 'நீங்கள் ஏன் என்னுடன் பேசவில்லை...' எனக் கூறி அழுதாள்; இளகிப் போனேன். பிடிவாதம் தவிர்த்து, அவளுடன் நன்கு பேசி, பழகலானேன். அலுவலக நண்பர் கள், அவள் என்னை காதலிப்பதாக கூறி னர்; அவளின் கண்ணில் காதல் தெரிந்தது. நான் அவளின் கனவில் வருவதாக கூறினாள். என் மீதான காதலை அவள் வாய் வழியாக அறிவிக்காவிட்டா லும், அவளது நடத் தையில், காதலை உணர்ந்தேன்.

'நான் ஆண்களி டம் பேச மாட்டேன், பள்ளி நாட்களில் என்னை காதலித்த, ஆறு பேரை மறுத் திருக்கிறேன்...' என்றாள். மனக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் எனக்கு, மனக் கட்டுப்பாடாய் இருக்கும் அவளை பிடித்திருந்தது. தகுந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, அவளிடம், 'ஐ லவ் யூ' கூறினேன். அவளோ, 'காதல் எல்லாம் வேண்டாம்; நண்பர்களாக கடைசி வரை இருப்போம். நான் யாரையும் காதலித்தால், என்னை வீட்ல வெட்டிப் போட்டுடுவாங்க...' என்றாள். 'நீயும் என்னை காதலிச்சா, நான் முஸ்லிம் மதத்திற்கு மாறி, உன்னை திருமணம் செய்து கொள்வேன்...' என்றேன். பதில் சொல்லாமல் மறுகினாள். 'மனசுல ஒண்ணை வச்சுக்கிட்டு, உதட்ல ஒண்ணை சொல்றியே... நியாயமா?' என்றேன். ஒரு வார தயக்கத்துக்கு பின், அவளும் என்னிடம், 'ஐ லவ் யூ' சொன்னாள்.

இருந்தும், அவளிடம் ஒரு தயக்கம் இருந்தது. வாரம் முழுக்க காதலிப்பாள். வார விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்பும் போது, 'நமக்குள் காதல் வேண்டாம்...' என்பாள். பெற்றோரின் மீதான பயத்தை காரணமாக காட்டுவாள். நான் அவளை கொஞ்சி, கெஞ்சி சரிக் கட்டுவேன்.

முதுகலை ரசாயனம் படிப்பதற்காக பார்த்து வந்த வேலையை, ராஜினாமா செய்தேன். நான் காதல் சொன்ன ஐந்தாம் நாளிலிருந்து, தினமும் மாலை அவளை கட்டிய ணைத்து முத்தமிட்டு விடுவேன். எங்களுக் குள் செக்ஸ் தவிர, எல்லாம் நடந்தது. பரஸ்பரம் எங்களின் நிர்வாணம் பரிச்சயம்.

இருந்தும் கூட அவளின் வீட்டு பயம் சிறிதும் குறைய வில்லை. அவள், தன் வேலையை தொடர்ந்து செய்தாள். தினமும் எனக்கு காதல் குறுந் தகவல்கள் அனுப்பு வாள். இரண்டு நாட் களுக்கு ஒரு தடவை, ஒரு ரூபாய் காய்ன் போனில் பேசுவோம். என்னை சந்திக்க வேறொரு வேலை யில் சேர்ந்தாள். எங் களது காதலில், ஐம் பது தடவைகளாவது பார்க், பீச், சினிமா, மகாபலிபுரம் என்று சுற்றினோம்.

முன் கோபப்பட் டால், 'நமக்குள் காதல் வேணாம்பா. இப்பவே நீ இவ்வளவு கோபப்பட்டேன்னா, உன்னை நம்பி நான் எப்படி தனியா வருவது...' என்பாள்; அதன்பின் கோபப் படுவதை தவிர்த்தேன். விதிவிலக்காக ஒரு தடவை அவள் எந்த ஆணிடமோ பேசியதற்கு கோபப்பட் டேன்; அவளின் ஜாக்கெட்டின் பின்புறம், 'லோ-கட்' இருந்ததற்கும் கோபப்பட்டேன்.

இரண்டு வருடங்கள் காதலை தொடர்ந்தோம். தன் பெற்றோர் காதலை தடுத்தால், போலீசில் புகார் செய்வோம் என்றாள். நானும், அவளும் இருக்கும் புகைப்படத்தின் பின், 'ஐ லவ் யூ' என எழுதி, கை நாட்டு போட்டு, கையெழுத்தும் போட்டுக் கொடுத்தாள். 'பெண்கள் மூடிசாடி உடை உடுத்த வேண்டும்...' என்ற என் கொள்கையை காதலியின் தோழி சாடியிருக்கிறாள். உடனே இவளும், 'நான் யார் கிட்ட வேணா பேசுவேன், எப்படி வேணாலும் டிரஸ் செய்வேன், நாம இனி காதலிக்க வேண் டாம்...' என குதித்தாள். 'அப்படியென்றால், நம் புகைப்படங்களை, நம் காதல் ஒப்பந்தங்களை கிழித்து போட்டு விடு...' என்றேன்; நொடி தயங்காமல், அனைத்தையும் கிழித்துப் போட்டாள் என் காதலி. என்னை விட்டு பிரிந்து விடுவாளோ என பயந்து, அவள் கால்களில் விழுந்து கதறினேன் அம்மா. வாக்குவாதம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மீண்டும் அவள் கால்களில் விழுந்து சமாதானப் படுத்தினேன்; அவளும் என் காலில் விழுந்து, என்னை சமாதானப்படுத்தினாள்.

என் பெற்றோர் இந்து வன்னியர். அவர்கள் எங்கள் காதலுக்கு முழு சம்மதம் தெரிவித்து விட்டனர். என் பெற்றோரிடம், என் காதலி, 'எந்த காரணத்துக்காகவும், உங்க மகனை பிரிய மாட்டேன்...' என சத்தியம் செய்து கொடுத்தாள்.

'நம் காதலை உன் வீட்டாரிடம் கூறி விடுவோம்...' என்றேன்; காதலி மறுத்தாள். அவளை மீறி விஷயத்தை காதலியின் அக்காவிடம் போட்டு உடைத்து விட்டேன். விஷயத்தை கூறும் வரை, என் காதலை உரக்க அறிவித்த காதலி, விஷயத்தை கூறிய பின், ருத்ரதாண்டவம் ஆடி விட்டாள். 'உன்னை நான் காதலிக்கவில்லை; சும்மா டைம் பாஸ். செத்துடுவேன்னு மிரட்டாதே. தாராளமா செத்துத் தொலை...' என்றாள். காதலியின் பெற்றோரிடம் முறையிட்டேன். 'போலீசில் பிடித்து கொடுப்போம்...' என மிரட்டி, விரட்டினர்.

அவள் மீண்டும் என்னிடம் வருவாளா அம்மா? வந்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்வேன். இனி, உங்களின் ஆலோசனையை எனக்கு கூறுங்கள் அம்மா.

இப்படிக்கு,
அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு —

ஒரு வெளிநாட்டுச் சிறுகதையை கூறுகிறேன்... கேள். ஒரு ஊரின் மரத்தடியில் மாபெரும் புதையல் புதைந்து இருந்திருக்கிறது. அதை எடுப்போர், 'வெள்ளை குரங்கு' என்ற வார்த்தையை, உருவத்தை மனதால் நினைக்காதிருக்க வேண்டும். புதையலை தோண்டியெடுக்கும் போது, குரங்கை நினைத்து விட்டால், புதையல் மறைந்துவிடும் என்ற நிலை. அன்றிலிருந்து இன்று வரை யாருமே அந்த புதையலை அடைய முடியவில்லை. காரணம், நினைக்காதே என்றால் மனம் நினைக்கிறது; கோடு தாண்டாதே என்றால் மனம் கோடு தாண்டுகிறது. திருமண பந்திகளில், இலைகளில் அல்வா அல்லது கேசரி ஒரு சிறுகரண்டி வைப்பர். சர்க்கரை நோயாளி தின்பது முதலில் அதைத்தான்; நீயும் அப்படித்தான். ஒழுக்கம், பரிசுத்தம், தியானம் என கூறிக் கொண்டே, ஒரு பெண்ளை காதலித்து, அவளுடன் ஏறக்குறைய செக்ஸ் வைத்திருந்திருக்கிறாய்.

நீ காதலித்த முஸ்லிம் பெண் நல்லவள்தான்; ஆனால், உன்னுடைய சில விஷயங்கள், அவளை பயமுறுத்தி விட்டன. அவளுடைய சில விஷயங் களும், அவளை பயமுறுத்தி விட்டன.

1.அவள் ஒரு முஸ்லிம் பெண். அவர்கள் காதலுக்காக, நூறு சதவீதம் மதம் மாற மாட்டார்கள். உருது முஸ்லிம் ஆண், தமிழ் முஸ்லிம் பெண்ணை மணந்து கொள்ள மாட்டான். முஸ்லிம் பெண்கள் காதலில் ஈடுபட்டாலும், ஆண், முஸ்லிமாக மாறினால்தான் மணந்து கொள்வர். அந்த மதமாற்றம் கூட முஸ்லிம் பெண்ணின் பெற்றோர் ஆமோதித் தால்தான் நடக்கும். படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பிய தன் முற்போக்கு பெற்றோருக்கு, அவள் நம்பிக்கைத் துரோகம் செய்ய துணியவில்லை.

2.முஸ்லிம் பெண்கள் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்திருப்பர். உடல் உறுப்புகள் எதுவுமே தெரியாத அளவிற்கு மூடிசாடித்தான் இருப்பர். வெளி ஆண்களிடம், நூற்றுக்கு ஒரு வார்த்தைதான் பேசுவர். அவளிடமே நீ போய், 'என்கிட்ட மட்டும் தான் பேசணும். உனக்கு ஆண் நண்பர்களே இருக்கக் கூடாது. 'ட்ரஸ்கோட்' படிதான் ஆடை அணியணும்...' என உத்தரவிட்டிருக்கிறாய். திருமணத்திற்கு பின், ஒரு கணவன் சொன்னால் சகித்துக் கொள்ளும் பெண், திருமணத்திற்கு முன் ஒரு காதலன் சொன்னால் சகிக்க மாட்டாள். உன் காதலி வெகுண்டு விட்டாள்.

3.மேற்படிப்புக்காக நீ வேலையை விட்டது அவளுக்கு கூடுதல் சங்கடம். வேலையில்லாத நீ, அவளை மணந்து, எப்படி குடும்பம் நடத்துவாய் என யோசித்து விட்டாள்.

4.ஐந்து மாதம் பழகியதில், நீ பல தடவை உன்னுடைய முரட்டு முன் கோபத்தை காட்டியிருக் கிறாய்; மிரண்டு விட்டாள்.

5.தன் வீட்டில் காதலை வெளிப்படுத்த சந்தர்ப்பம் எதிர்பார்த்திருக்கிறாள் உன் காதலி. சந்தர்ப்பம் அமையாவிட்டால், காதலுக்கு டாட்டா காண்பித்து விடுவோம் என்றிருந்திருக்கிறாள். அவசரக் கொழுக் கட்டை நீயோ, அவளது அக்காவிடம் போட்டு உடைத்திருக்கிறாய்.

6.திருமணம் செய்து வையுங்கள் என்று நீ காதலியின் அம்மாவிடமும், அப்பாவிடமும் போய் முறையிட்டது சிறுபிள்ளைத்தனமான செயல். வைரம் வாங்க மக்கள் கடைக்கு வருவர். வைரத்தை கூவி, கூவி தெருவில் விற்கக் கூடாது.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இப்போது, உனக்கு தேவை நல்ல வேலையும், திருமணமும். பெற்றோர் பார்த்து வைக்கும் உன் மதப் பெண்ணையே திருமணம் செய்து கொள். மதம் மாறிய திருமணங்கள், மூன்று தலைமுறைகளின் சந்தோஷங்களையாவது காவு கேட்கும்.

நான் ரொம்ப நல்லவன் என்று சான்றிதழ், உனக்கு நீயே கொடுத்துக் கொõள்ளாதே.

உரக்க அறிவிக்காமல் சாதிக்கும் சாதனை இளைஞனாக மாறு.

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***






      Dinamalar
      Follow us