PUBLISHED ON : பிப் 14, 2016

பிரபல இந்தி - மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்; இவர், தன், அக்கால சென்னை வாழ்க்கை பற்றி கூறுகிறார்:
வறுமையில் வாடிய நான், வாய்ப்பு தேடி சென்னை வந்து, அலைந்து திரிந்தேன். அப்போது, ஏவி.எம்., ஸ்டுடியோ காவலாளி என்னை உள்ளே விட மாட்டார். அவரை பல நாட்கள் நோட்டமிட்டதில், அவர் நீரிழிவு நோயாளி என்பதும், அடிக்கடி சிறுநீர் கழிக்க, கழிப்பறை செல்வதையும் கண்டேன். பின், அவர் சிறுநீர் கழிக்க செல்லும் போது ஸ்டுடியோவுக்குள் ஓடுவேன். இப்படி ஒரு முறை உள்ளே சென்ற போது தான், முதல் முறையாக, ரஜினிகாந்தை பார்த்தேன்.
இயக்குனர் பாரதிராஜாவை போல், இயக்குனர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. அவருடைய, கிழக்கே போகும் ரயில் படத்தை, மிகவும் விரும்பி பார்த்தேன். 'பூவரசம்பூ பூத்தாச்சு...' என்ற பாடலை இப்போதும், ரசித்து கேட்பேன். இன்று, மும்பையில் இருந்தாலும், சென்னை வாச நினைவுகள் என்றென்றும் பசுமையுடன் இருக்கிறது, என்கிறார்.
— ஜோல்னாபையன்.

