PUBLISHED ON : ஜன 31, 2016

அ நிறம் | அளவு
அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் குவாண்டிகோ என்ற சீரியலில் நடித்து வருகிறார், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. 100 நாடுகளில், 44க்கும் அதிகமான மொழிகளில், ஒளிபரப்பாகும் இத்தொடரில், அமெரிக்க எப்.பி.ஐ., குழுவில் பணியாற்றும் பெண்ணாக நடித்துள்ளார். தற்போது, இத்தொடர், 20 எபிசோட் முடிந்துள்ள நிலையில், அடுத்தபடியாக, அவரது கதாபாத்திரம் அதிக, 'த்ரில்லிங்' திருப்பங்களுடன் நகர்த்தப்படுகிறது. அதனால், இத்தொடரை தென்னிந்திய மொழிகளில், 'டப்' செய்து வெளியிடவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.
