PUBLISHED ON : ஜன 31, 2016

மத்திய அமெரிக்காவில் உள்ள அழகான நாடு ஹோண்டுராஸ்; இந்நாடு, பழங்காலத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது, கடற்கரை ஓரத்தில் இருந்த இந்நகரை, குரங்கு கடவுள் ஆட்சி செய்ததாகவும் அது, வெள்ளை நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலப்போக்கில், இந்நகரம் புதைந்து விட்டதாகவும், அந்நகரத்தில், ஏராளமான தங்க, வைர புதையல்கள் உள்ளதாகவும் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அங்கு, ஒரு நகரம் புதைந்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அந்தப் பகுதியை தோண்டி எடுத்து, உண்மையை கண்டுபிடிக்க, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
'ஒருவேளை, அங்கு புதையல் இருந்தால், மத்திய அமெரிக்காவில், மிகப் பெரிய பணக்கார நாடாக, ஹோண்டுராஸ் உருவெடுக்கும்...' என்கின்றனர், பொருளாதார நிபுணர்கள்.
— ஜோல்னாபையன்.
