sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உளவியல் ரகசியங்கள்!

/

உளவியல் ரகசியங்கள்!

உளவியல் ரகசியங்கள்!

உளவியல் ரகசியங்கள்!


PUBLISHED ON : மார் 10, 2019

Google News

PUBLISHED ON : மார் 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலரால், சிரிப்பதை நிறுத்த முடியாது; அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு, படுத்தால் உறக்கம் வராது; வேலை செய்யும்போதெல்லாம் உறக்கம் வரும்.

இப்படி பல விஷயங்களை எப்படி கட்டுப்படுத்துவது என, தெரியாமல் திண்டாடுவர்.

நம் உடலை, உணர்வுகளை, உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு, பலவற்றை, சின்ன சின்ன, பயிற்சிகள் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது, எப்படி என, காணலாம்...

* ஆழ்ந்த துாக்கம் வராமல் தவிப்பவர்கள், படுத்த பின், இமைகளை வேகமாக இமைத்தால், ஒரு சில நிமிடத்தில் உறக்கம் வரும். உறக்கம் இல்லாமல், மயக்க நிலையில் மட்டுமே இருக்கிறீர்கள் எனில், ஒரு காலை மட்டும் தரையில் படும்படி வையுங்கள்; நன்கு உறக்கம் வரும்

* குளித்து முடிக்கும்போது, 'ஷவரில்' குளிர்ந்த நீரில் குளித்தால், சருமத்தில் இருக்கும் நுண் துளைகள் மூடிவிடும். இதனால், பாக்டீரியா, அழுக்கு சேர்வதை தடுத்து, பருக்கள் அதிகரிக்காமல் காக்கலாம்

* சிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கும்போது, அருகே பாத்ரூம் இல்லையென்றால், மூளையை திசை திருப்பி, உங்களுக்கு பிடித்த தின்பண்டத்தை சுவைப்பது போல் எண்ணத் துவங்குங்கள். சிறிதுநேரம், அவசர அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்

* உறங்க செல்வதற்கு முன், நீங்கள் படிக்கும் விஷயம், மறக்காமல், எப்போதுமே ஞாபகத்தில் இருக்கும்

* ஒற்றை தலைவலி இருந்தால், கைகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தினால், தலைவலி குறையும்

* கொசு கடித்த இடத்தில், தொடர்ந்து அரிக்கிறதா... 'டியோடரன்ட்' பூசினால், அரிப்பை தடுக்க முடியும்

* வேலை செய்து கொண்டிருக்கும்போது, துாங்கி துாங்கி விழுகிறீர்களா... எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் மூச்சை அடக்கி, வெளி விடுங்கள். துாக்கத்தை தடுக்க முடியும்

* அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களா... உங்களை, நீங்களே கிள்ளிக் கொள்ளுங்கள்

* சோகத்தில் இருக்கும் நேரத்தில், ஒரு தாளில் எதையாவது எழுதி குவியுங்கள். சோகம் குறைந்து, இலகுவாக உணர்வீர்

* மூக்கடைப்பு இருந்தால், உறங்கும்போது, அருகே ஒரு வெங்காயம் வைத்து உறங்குங்கள். காலையில் மூக்கடைப்பு சரியாகி விடும்

* தொண்டையில் கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா... காதை இதமாக தேய்த்து கொடுங்கள், இந்த உணர்வு நின்று விடும்

* அழுகையை அடக்க வேண்டுமா... கண்களை அகல விரித்து, இமைக்காமல் வைத்திருந்தால், அழுகை நின்று விடும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன்






      Dinamalar
      Follow us