PUBLISHED ON : செப் 24, 2023

அ நிறம் | அளவு
தமிழகத்தில் இப்போது, சைக்கிள் ரிக் ஷாக்களை காண்பது அரிது. 40 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் திரும்பும் இடமெல்லாம் ரிக் ஷாக்களை காண முடிந்தது.
இன்று பெருமளவில் ஆட்டோக்கள் வலம் வந்து, சைக்கிள் ரிக் ஷாக்கள் காணாமல் போனது. ஆனால், புதுச்சேரியில் இன்றும், சாலைகளில் ஏராளமான ரிக் ஷாக்கள் வலம் வருவதை காணலாம்.
படத்தில், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துக்கு முன், சாலை ஓரம் ரிக் ஷாக்கள், பயணிகளுக்காக காத்துக் கிடப்பதை பாருங்கள். புதுச்சேரியில் இருந்து அவ்வளவு எளிதில் ரிக் ஷாக்களை விரட்ட முடியாது போலிருக்கிறது.
ஜோல்னாபையன்
