தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மழைக்கால பானம்!

மழைக்கால பானம்!

மழைக்கால பானம்!


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லி காபி!

தேவையான பொருட்கள்:

தனியா - 150 கிராம்

சுக்கு - 50 கிராம்

மிளகு - 10 கிராம்

திப்பிலி - 10 கிராம்

சித்தரத்தை - 10 கிராம்

சதகுப்பை - 10 கிராம்

பனை வெல்லம் - தேவையான அளவு

செய்முறை:

பனைவெல்லம் நீங்கலாக, மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்சியில் நைசாக பொடிக்கவும். இப்பொடியை, காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

தேவையான போது, ஒரு டம்ளர் தண்ணீருக்கு, இரண்டு தேக்கரண்டி பொடி மற்றும் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டினால், மணமான மல்லி காபி தயார்!

குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின், வறுக்கவும்.

மசாலா பூண்டு பொரி!

தேவையான பொருட்கள்:

பொரி - 1 கப்

வேர்க்கடலை - கால் கப்

பொட்டுக்கடலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 6 பல்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கடுகு, எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில், சிறிதளவு எண்ணெயை காய விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தோலுடன் பூண்டை தட்டிப் போடவும். இதனுடன், மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரி மற்றும் உப்பு சேர்த்து, புரட்டி இறக்கவும். மழைக்காலத்தில், மாலை நேர சிற்றுண்டியாக, வீட்டில் உள்ளவர்களுக்கு இதைச் செய்து கொடுத்தால், கண் சிமிட்டும் நேரத்தில் காலியாகி விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us