PUBLISHED ON : அக் 29, 2023

அ நிறம் | அளவு
உத்தரபிரதேச மாநிலத்தில், ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரருக்குள் சொத்து தகராறு ஏற்பட, இருவரும் நீதிமன்றத்தை நாடினர். வழக்கு முடிவுக்கு வராமல், பல்லாண்டு நடந்து, பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.
தன்னிடம் இருந்த, 1929 மாடல், 'பியட்' காரை, கேரள மாநிலம், பாலக்காட்டில் வசிக்கும் பழமையான கார்களை சேகரிப்பதில் ஆர்வமுள்ளவரான ராஜேஷ் அம்பாள் என்பவரிடம் விற்று விட்டார், சகோதரர்களில் ஒருவர்.
பொருளாதார நெருக்கடி ஏற்பட, மற்றொரு சகோதரரும், தன், 1930 மாடல், 'போர்டு' காரை, ராஜேஷிடமே விற்றார்.
ஆயினும், இவர்கள் வழக்கு விசாரணை முடிந்ததாக தெரியவில்லை.
ராஜேஷிடம் இதுபோன்று மிக பழமையான, விலை உயர்ந்த கார்கள் நிறைய இருக்கின்றன. கணவரின் பாரம்பரிய கார்கள் சேகரிப்புக்கு துணையாக இருக்கிறார், மனைவி, ரம்யா.
— ஜோல்னாபையன்
