தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ராமநாதபுரம் பால் சர்பத்!

ராமநாதபுரம் பால் சர்பத்!

ராமநாதபுரம் பால் சர்பத்!


PUBLISHED ON : மே 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளநீர், பதநீர், ரோஸ்மில்க், பாதாம் கீர், ப்ரூட் மிக்சர், தயிர் மற்றும் மோர் என, தாகம் தணிக்க பல பானங்கள் இருந்த போதும், 'பால் சர்பத்' என்ற பானத்தை பருகி, வெரைட்டி காட்டுகின்றனர், ராமநாதபுரவாசிகள்.

கொளுத்தும் வெயிலுக்கு, 'குளுகுளு'வென ஏதேனும் பானம் பருகினால், நாவுக்கும், தொண்டைக்கும் இதமாக இருக்கும் என்று நினைப்போருக்கு பால்

சர்பத் ஏற்றது.

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள, காதரியா சர்பத் கடைக்கு, பால் சர்பத் பருகுவதற்கென்றே தேடி வருகின்றனர் மக்கள். கண்ணாடி டம்ளரில், வெளிறிய சிவப்பு நிறத்தில் உள்ள பாதாம் பிசின் மற்றும் ஐஸ் கட்டிகளுடன் இருக்கும் சர்பத்தை காணும் போதே, கண்கள் குளிர்கின்றன.

டம்ளரின் அளவில், கால் பங்கு நன்னாரி சர்பத், ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின், காய்ச்சி, குளிர்விக்கப்பட்ட பசும் பால் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்தால், நன்னாரி பால் சர்பத் தயார்!

காதரியா சர்பத் கடைக்காரர், நவ்ரோஜ் கூறும் போது, 'கடந்த, 1957ல் துவங்கிய இக்கடையில், ஐந்தாவது தலைமுறையாக சர்பத் விற்கிறோம். நன்னாரி வேரை காய்ச்சி, நாங்களே சர்பத் தயாரிக்கிறோம். பாதாம் பிசின், நன்னாரி இரண்டும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை. சுவை, தரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் உண்டு என்பதால், மக்கள் தேடி வருகின்றனர்...' என்கிறார்.

ஒருமுறை சுவைத்து விட்டால், மீண்டும் மீண்டும் பருக துாண்டுகிறது பால் சர்பத். அரபு நாடுகள், மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பார்சல் அனுப்பப்படுகிறது.

காரைக்கால் ஜே.பி., சர்பத், தஞ்சாவூர் கீழவாசல் குணங்குடி தாசன் சர்பத் நிலையம் மற்றும் பழனி காந்தி மார்க்கெட்டில் உள்ள, செந்தில் சர்பத் கடையிலும், பால் சர்பத் பிரபலம்.

நவ்ரோஜ் மொபைல் எண்: 94434 44116

மு.ஆதவன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us