PUBLISHED ON : செப் 01, 2013

அ நிறம் | அளவு
மஞ்சள், பச்சை நிறத்தில் தான் வாழைப்பழங்களை பார்த்திருக்கிறோம்; வாங்கியும் சுவைத்திருக்கிறோம்.
ஆனால், ஆசியா மற்றும் கிழக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில், சிவப்பு வண்ணத்தில் வாழைப் பழங்கள் உள்ளன. இதனை, 'ரெட் டக்கா' வாழைப்பழங்கள் என்று அழைக்கின்றனர். இப்பழங்களின் உட்பகுதி வெளிர் ஊதாக்கலரில் இருக்கும். மற்ற பழங்கள் போன்றே மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தாலும், இப்பழங்களின் மணம் மட்டும், 'ரெஸ்பரி' போன்ற வாசனையில் இருக்கும்.
இந்நாடுகளில், இவ்வகை சிவப்பு வாழைப்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
— ஜோல்னா பையன்.
