PUBLISHED ON : அக் 21, 2018

சீனாவில், 'ஷாப்பிங்மால்' வைத்திருக்கும் உரிமையாளர்கள், பெண் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதன்படி, தங்கள், 'ஷாப்பிங் மாலு'க்கு, தனியாக வரும் இளம் பெண்களுக்கு, 'ஷாப்பிங்' செய்வதற்கு உதவும் வகையில், ஆண்களை வாடகைக்கு விடுகின்றனர்.
குறிப்பிட்ட, 'ஷாப்பிங் மால்'களின் நுழைவு வாயில்களிலேயே, இந்த, 'பாய் பிரண்டு'கள் நிற்கின்றனர். அவர்களில், தங்களுக்கு பிடித்தவர்களை, இளம் பெண்கள், வாடகைக்கு எடுக்கலாம்.
இந்த, 'பாய் பிரண்டு'கள், இளம் பெண்களுக்கு, பொருட்களை வாங்குவதற்கு ஆலோசனை அளிப்பது, பைகளை துாக்கிச் செல்வது, அவர்களுடன் டீ, காபி சாப்பிடுவது போன்ற பணிகளைச் செய்வர்.
இதற்காக, குறிப்பிட்ட தொகை, கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 'ஷாப்பிங்' முடிந்ததும், 'பாய் பிரண்டு'களை, 'ஷாப்பிங் மாலின்' நுழைவு வாயிலில் விட்டுச் சென்று விட வேண்டும்.
ஏராளமான இளம் பெண்கள், 'பாய் பிரண்டு'களை வாடகைக்கு எடுப்பதில், ஆர்வம் காட்டுவதால், 'ஷாப்பிங் மால்'களில், வியாபாரம் களை கட்டுகிறது. உலகம் போற போக்கை பாரு... ஜிங்கிடி ஜில்லாலே...
— ஜோல்னாபையன்.
