PUBLISHED ON : ஜன 19, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜஸ்தான் மாநிலம், பிப்லாந்திரி கிராமத்தில், தாய்க்குலங்கள், பெண் குழந்தை பிறந்தால், கூடையில் வைத்து, ஒரு விழாவை கொண்டாடி கவுரவிக்கின்றனர்.
இக்கிராமத்தில், ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதன் பெற்றோர், 111 மரக் கன்றுகளை நட வேண்டும். அத்துடன் குழந்தை பெயரில், 18 ஆண்டுகளுக்கு, 40 ஆயிரம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியவரின் பெயர், சியாம்சுந்தர் பாலிவால். இவரின் மகள், இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்டார். அந்த துயரத்தை மறக்கவே, பெண் குழந்தைகளை கவுரவிக்க விரும்பி, புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
— ஜோல்னாபையன்.

