/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
/
பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
PUBLISHED ON : ஜன 19, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள பேலஸ் தியேட்டரில், பல ஆண்டுகளாக நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடந்து வருகிறது. இந்த தியேட்டரின் உள் அரங்கத்தில், இரண்டு இருக்கைகள் எப்போதும் காலியாக வைக்கப்பட்டிருக்கும். காரணம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கும்போது, தியேட்டர் சார்ந்த சில ஆவிகள் வந்தமர்ந்து, ரசித்து செல்வதாக நம்பிக்கை. அவற்றிலும் குறிப்பாக, ஒரு காலத்தில், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடிய முக்கிய பெண்ணான அன்னா பாவ்லோவா மற்றும் இசை பாடல்களை எழுதும், இவார் நோவெல்லோ ஆகியோர், 'ரெகுலர்' ஆவிகளாக வந்து உட்கார்ந்து, நடனங்களை ரசிப்பராம்.
— ஜோல்னாபையன்

