PUBLISHED ON : அக் 15, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 1997ல் வெளியான, டைட்டானிக் என்ற ஆங்கில திரைப்படத்தில் காதல் ஜோடிகளாக நடித்த, லியானோர்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட்டை யாரும் மறந்திருக்க முடியாது.
இவர்கள், சினிமா காதல் ஜோடிகள் தான் என்றாலும், உண்மையான காதல் ஜோடிகள் என்றே நினைத்தனர், படத்தை பார்த்தோர்.
இப்போது, டிகாப்ரியோவுக்கு, 42 வயது; கேத் வின்ஸ்லெட்டுக்கு, 41 வயதாகிறது. இருவரும், தங்களுக்கென தனித் தனி பாதையை உருவாக்கி, ஹாலிவுட்டில் வெற்றிகரமான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.
சமீபத்தில், ஸ்பெயினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இருவரும் சந்தித்த போது, கட்டிப்பிடித்து, நலம் விசாரித்தனர்.
இதன்பின், டிகாப்ரியோவும், வின்ஸ்லெட்டும் நீண்ட நேரம், தங்களின் திரை அனுபவங்களை, மனம் விட்டு பேசியதை, பலரும் ஆச்சரியமாக பார்த்து மகிழ்ந்தனர்.
— ஜோல்னாபையன்

