தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ரோபோ கேர்ள் பிரண்ட்!

ரோபோ கேர்ள் பிரண்ட்!

ரோபோ கேர்ள் பிரண்ட்!


PUBLISHED ON : ஜன 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் நண்பர்கள் கிடைக்காமல், அல்லாடும் இளைய தலைமுறையினரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம். பெண் ரோபோக்களை, இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அழகான இளம் பெண் போல் தோற்றமளிக் கும், இந்த ரோபோவுடன், ஆசை தீர பேசி மகிழலாம்.

அதற்காக, நாம் கேட்பதற்கு எல்லாம், இந்த ரோபோ பதில் அளிக்கும் என எதிர்பார்க்காதீர்கள். அதில், பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட, கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கும். பேசும் போது, இந்த பெண் ரோபோவின் முகத்தில், அதற்கேற்ற முக பாவங்களும் இருக்கும்படி, தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோவை தயாரிக்கும் பணி, இன்னும் முடிவடையவில்லை. இது என்ன விலைக்கு கிடைக் கும் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

'பெண் நண்பர்கள் கிடைக்காமல், விரக்தியுடன் தனிமையில் பொழுதை கழிக்கும் ஆண்களின் மகிழ்ச்சிக்காக, இந்த ரோபோவை தயாரித்து வருகிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரும்...' என்கின்றனர், இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us