/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கார்ட்டூன் கேரக்டருக்காக, ரூ.3.5 கோடி செலவு!
/
கார்ட்டூன் கேரக்டருக்காக, ரூ.3.5 கோடி செலவு!
PUBLISHED ON : மே 11, 2025

அனிமேஷன் கதாபாத்திரங்களில், 'ஷின்-சான்' பெயரைக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது.
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கதாபாத்திரத்துக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சிவப்பு மற்றும் வெள்ளை செங்கற்களால் தனித்துவமாக கட்டப்பட்ட, ஷின்னோசுகே நோஹாராவின் (ஷின்-சான்) சின்னமான வீட்டை, எப்போதும் நினைவில் வைத்திருப்பர், அவரது ரசிகர்கள்.
ஷின்-சானின் தீவிர ரசிகரான, சீனாவைச் சேர்ந்த, 21 வயது ஷென் என்பவர், தற்போது அந்த வீட்டை, 3.5 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளது, சீனா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
ஜூலை 2024ல், கட்டுமானப் பணியைத் தொடங்கினார். இந்த வீட்டை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, ஷாங்காய்க்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை, பயணம் செய்துள்ளார், ஷென்.
தன் தாயின் நிதி உதவியை வைத்து, 100 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஷின்-சான் வீட்டுக்கு, புத்துயிர் கொடுத்துள்ளார்.
இந்த வீடு, தற்போது உலகம் முழுவதிலும் உள்ள அனிமேஷன் கதாபாத்திர ரசிகர்களை ஈர்க்கும் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
— ஜோல்னாபையன்