sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/வறட்டி!

வறட்டி!

வறட்டி!


PUBLISHED ON : மே 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் முன்னோர், ஒன்றும் மூடர்கள் அல்ல. அக்காலத்தில், வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் இந்த பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு. 15 நாட்களுக்கு ஒருமுறை, வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில், வறட்டி காய வைக்கும் பழக்கம். தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம்.

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக, 28.35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை, வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை, உங்களை திகைக்க வைக்கலாம்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. நாட்டு மாடுகளின் சாணம், மிகச்சிறந்த கிருமி நாசினி என்கிறது அறிவியல்.

இரண்டு வயது நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும், 1,000 தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை, தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால், வீட்டுச்சுவரில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வளையத்தில், நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தனர் என்றால், நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள், நன்கு காய்ந்த இந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு, அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத, எஃகு அரணாக மாறிப் போகும். இதனாலேயே, சோழர்களின் கோட்டையை, ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலும், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம், கைகள் மூலமாக உடலின் கெட்ட கொழுப்புகளை அகற்றி, சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில், 48 நாட்கள் புழங்கி வந்தால், அலர்ஜி. கேன்சர், இதய கோளாறு போன்றவை சரியாகும் என, தெரிவித்துள்ளனர். சித்தர்கள்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்து, தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என, முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்து கொள்ளாமல், கேலி செய்து கேவலப்படுத்துகிறோம்.

நம் முன்னோரின் பழக்க வழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்.

எம். அசோக் ராஜா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us