
உங்கள் பலம், பலவீனம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா... கீழே உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து, அதை தெரிந்து கொள்ளுங்களேன்.
1. உடற்பயிற்சிக்கு என்று தினமும், 20 நிமிடமாவது ஒதுக்குகிறேன்!
அ.ஆம், ஆ.வாரத்தில் சில நாட்கள் மட்டும், இ.நினைத்துக் கொள்கிறேன். ஆனால், நேரமில்லை
2. என் துணி அலமாரி, 'நீட்'டாக இருக்கும்!
அ.ஆம், ஆ.சில சமயங்களில், இ.கலைந்த நிலையில்
3. அன்றாட வேலைகளை அன்றே முடிப்பதில் தீவிரம் காட்டுவேன்!
அ.ஆம், ஆ.சில நாட்கள் மட்டும், இ.நேரமில்லை
4. எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன்!
அ.ஆம், ஆ.சில சமயங்களில், இ.பிரச்னை நிறைய இருப்பதால், முடிவதில்லை
5. பிரச்னை வந்தால், 'டென்ஷன்' இன்றி சமாளிப்பேன்!
அ.ஆம், ஆ.சில சமயங்களில், இ.கவலையாக இருப்பேன்
6. என்னிடம் மற்றவர்கள் ஆலோசனை கேட்பர்!
அ.ஆம், ஆ.சில சமயங்களில், இ.நான் தான் அவர்களிடம் அதிகம் கேட்பேன்
7. என் மனநிலை அடிக்கடி காரணம் இல்லாமல் மாறும்!
அ.ஆம், ஆ.சில சமயங்களில், இ. அடிக்கடி
8. உழைப்பதில் விருப்பம் அதிகம்!
அ.ஆம், ஆ.சில சமயம் மட்டுமே, இ.இல்லை
9. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு!
அ.ஆம், ஆ.சில சமயம், இ.என்னால் முடியாது
10. என்னால் என்னென்ன முடியும் என்று பட்டியலிட முடியும்!
அ.ஆம், ஆ.சில சமயம், இ.என்னால் முடியாது
11. செலவழிப்பதற்கு முன் யோசிப்பேன்!
அ.ஆம், ஆ.சில சமயம், இ.செலவழித்த பின் வருத்தப்படுவதுண்டு
12. என் எதிர்காலம் நன்றாக இருக்கும்!
அ.ஆம், ஆ.தெரியவில்லை, இ.குழப்பமாக உள்ளது
13. புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலைகளை சுலபமாக சமாளிப்பேன்!
அ.ஆம், ஆ.சில சமயம், இ.தடுமாற்றம் அதிகம்
14. ஒரு லட்சியத்தோடு வாழ்கிறேன்!
அ.ஆம், ஆ.யோசிக்கிறேன், இ.இதுவரை அப்படி எதுவும் இல்லை
15. நான் அமைதியாக இருப்பது, என் கையில் உள்ளது!
அ.ஆம், ஆ.சூழ்நிலையை பொறுத்தது, இ.அமைதியாக இருக்க முயல்கிறேன்.
'அ'விற்கு, 5 மதிப்பெண்; 'ஆ'விற்கு, 3 மதிப்பெண்; 'இ'க்கு, 2 மதிப்பெண். உங்கள் மதிப்பெண்களை கூட்டி பாருங்கள்.
மதிப்பெண், 60 முதல், 75 வரை இருந்தால், வாழ்த்துக்கள். வாழ்க்கையில் தெளிவாக இருப்பவர்கள், நீங்கள். எதற்கும் அடுத்தவரை குறை கூறாமல், உங்கள் கையில் இருக்கும் தீர்வை சிந்திப்பீர்கள். அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுவீர்கள்.
மதிப்பெண், 45க்கு மேல், 60 வரை இருந்தால், நீங்களும், 'பர்பெக்ட்' தான். ஆனால், முழுதாக இல்லை. ஆரம்பம் நன்றாக இருக்கும். ஆனால், முடிவில் சொதப்பும் கேரக்டர், நீங்கள். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால், வெற்றி மேல் வெற்றி கிட்டும்.
மதிப்பெண், 35க்கு மேல், 45 வரை இருந்தால், பயங்கர குழப்பவாதி நீங்கள். தெளிவான பாதை இருந்தும், போக தெரியாமல் இருக்கிறீர்கள். ஐடியா அதிகமாக இருந்தாலும், அதை செயல்படுத்த மெத்தனமாக இருப்பீர்கள். எனவே, தீயா வேலை செய்யணும்.
உங்கள் மதிப்பெண், 35க்கும் குறைவாக இருந்தால், இதுதான் சரியான சமயம். நீங்கள் எதில் பலவீனம் என்று, இந்த சுயபரிசோதனையிலேயே தெரிந்திருக்கும். கடின உழைப்பு கண்டிப்பாக தேவை.
சி. நிவேதிதா