
ரஜினி எழுதிய, 'பஞ்ச் டயலாக்!'
ஊரடங்கு காரணமாக, ரஜினி நடித்து வந்த, அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதற்கு முன், தான் நடித்த சில படங்களில், தனக்கான, 'பஞ்ச்' வசனங்களை எழுதி நடித்துள்ள ரஜினி, தற்போது, அண்ணாத்த படத்திற்காகவும், ஓரிரு, 'பஞ்ச்' வசனங்களை எழுதியுள்ளார். அதை, போனிலேயே, இயக்குனர் சிவாவிடம், தன் ஸ்டைலில் ரஜினி பேசிக் காட்டினார். அதையடுத்து, கை தட்டி வரவேற்ற சிவா, 'இந்த, 'பஞ்ச்' வசனங்களும், உங்களது ரசிகர்களின், 'பேவரிட்' வசனங்கள் வரிசையில் இடம் பிடிக்கும்...' என்று கூறியுள்ளார். ஆக, சண்டை காட்சிகளில், 'டூப்' பயன்படுத்தினாலும், 'பஞ்ச்' வசனங்கள் விஷயத்தில், ஒரிஜினலாகவே, 'ஒர்க் - அவுட்' செய்துள்ளார், சூப்பர் ஸ்டார் ரஜினி.
— சினிமா பொன்னையா
மாளவிகா மோகனனுக்கு, வாய்ப்பூட்டு!
தளபதி படத்தில் நடித்துள்ள, மாளவிகா மோகனன், தன்னை பெரிதாக, 'பில்ட் - அப்' பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தளபதியுடன் தான் நடித்துள்ள சில முக்கிய காட்சிகளை, 'அவுட்' பண்ணி வருகிறார். ஆனால், அது எல்லாமே, படத்தில், 'ஹைலைட்'டான காட்சிகள். இந்த சேதி, பட இயக்குனரின் காதுக்கு சென்றதை அடுத்து, அதிர்ச்சியடைந்தவர், அம்மணியுடன் கடுமையாக மோதியிருக்கிறார். அதோடு, 'இனிமேல், படம் திரைக்கு வரும் வரை, படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட, 'மீடியா'க்களிடம் பேசக் கூடாது...' என்று, நடிகைக்கு, வாய்ப்பூட்டு போட்டுள்ளார், அப்பட இயக்குனர்.
— எலீசா
சண்டை போட்ட, மஞ்சிமா!
பல படங்களில் நாயகியாக நடித்துள்ள, மஞ்சிமா மோகன், விஜய்சேதுபதியின் தங்கையாக ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் தங்கை வேடம் என்பதை மனதில் கொண்டு, அவரது சம்பளத்தில் சில லட்சங்களை தள்ளுபடி செய்திருக்கின்றனர். ஆனால், மஞ்சிமாவோ, 'என்னைப் பொறுத்தவரை கதாநாயகி-, தங்கை எதுவானாலும், நடிப்பு ஒன்று தான். அதனால், தங்கை வேடம் என்பதற்காக, படக்கூலியை குறைப்பதை அனுமதிக்க மாட்டேன்...' என்று, கதாநாயகிக்குரிய சம்பளத்தையே, சண்டை போட்டு வாங்கிக் கொண்டார். விடா முண்டனும் கொடாக் கண்டனும்!
— எலீசா
காரசார கருத்துக்களை காசாக்கும், கஸ்துாரி!
'சோஷியல் மீடியா'வில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு, அடிக்கடி வம்பில் மாட்டி வருபவர், நடிகை கஸ்துாரி. தற்போது, 'யு டியூப்' சேனல் துவங்க தயாராகி விட்ட கஸ்துாரி, 'இதுவரை, 'டுவிட்டரில்' கருத்து வெளியிட்டு, பைசா பேறவில்லை. அதனால், இனிமேல், 'யு டியூப்' சேனலில் அதிர வைக்கும் காரசார கருத்துக்களை வெளியிட்டு, இதை காசாக்கப் போகிறேன்...' என்கிறார். ஏற்கனவே, ஹன்சிகா, ரம்யா நம்பீசன் மற்றும் வனிதா விஜயகுமார் உட்பட பல நடிகையர், 'யு டியூப்' சேனல் நடத்தி வரும் நிலையில், அவர்களையெல்லாம் விட, நாட்டு நடப்புகள் குறித்து காரசார விவாதங்களை வெளியிட்டு, 'லைம்லைட்'டுக்கு வரப்போகிறார், கஸ்துாரி. எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி, அம்மனவர் பொற் பட்டம் கட்டப் போகிறார்!
— எலீசா
அதிர்ச்சியில் ஷங்கர்!
கமல் நடிக்கும், இந்தியன் - 2 படம், 350 கோடி ரூபாயில் தயாராக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, அப்படத்தின் பட்ஜெட்டை, 225 கோடி ரூபாயாக குறைத்து விட்டனர். தற்போது, 'கொரோனா' வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், படத்தை பெரிய அளவில் வியாபாரம் செய்ய முடியாது என்று நினைத்த, லைக்கா நிறுவனம், இந்தியன் - 2 பட்ஜெட்டை, 175 கோடியாக குறைத்து விட்டது. இதனால், 400 கோடி, 500 கோடி என்று, பிரமாண்டமாக படங்கள் இயக்கி வந்துள்ள, இயக்குனர் ஷங்கர், இத்தனை குறைவான பட்ஜெட்டில், மெகா படத்தை எப்படி இயக்குவது என்று, அதிர்ச்சியடைந்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தமிழ், தெலுங்கு சினிமாக்கள், தன்னை ஓரங்கட்டுவதால், கேரளா சினிமாவுக்குள், 'என்ட்ரி' கொடுத்துள்ளார், மாமி நடிகை. இதையடுத்து, 'பாலிவுட்'டையும் ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ள நடிகை, அடிக்கடி மும்பை பறந்து, அங்குள்ள மெகா இயக்குனர்களை சந்தித்து, பட வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, 'தென் மாநில நடிகையர், சைவத்துக்கு மட்டுமே செட்டாவர்...' என்று நினைக்கிற, 'பாலிவுட்' இயக்குனர்களின் எண்ணத்தை உடைக்கும் வகையில், தன் ஆபாச, 'ஆல்பத்'தை, அவர்களின் பார்வைக்கு வைத்து, பதற வைத்து விட்டார், மாமி நடிகை. ஆக, விரைவில், மாமி நடிகையின் தர்பார், 'பாலிவுட்'டில் அமர்க்களமாக துவங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'நம்ம பிரண்ட்ஸ் சேர்ந்து ஆரம்பிச்ச, 'வாட்ஸ் - ஆப்' குரூப்ல இருந்து, பிரிந்து போனாளே, த்ரிஷா, அவ, புதுசா வந்திருக்கிற, 'சிங்காரி ஆப்'ல், செம கலக்கல் ஆட்டம் போட்டிருக்காளாம். அதைப் பார்த்த, என் அத்தைப் பெண், எனக்கு, 'பார்வர்டு' பண்ணியிருக்கா... பாரேன்...'
'அட... ஆமா... என்னடி இவ இப்படி கதிகலங்கற மாதிரி ஆட்டம் போட்டிருக்கா... தாங்க முடியலடி...'
- இப்படி, தோழியர் இருவர் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* மலையாளத்தில், மோகன்லாலுடன், ராம் என்ற படத்தில் நடிக்கிறார், த்ரிஷா.
அவ்ளோதான்!