/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
செரீனா வில்லியம்சின், "பிகினி' கலாட்டா!
/
செரீனா வில்லியம்சின், "பிகினி' கலாட்டா!
PUBLISHED ON : மே 12, 2013

அமெரிக்காவை சேர்ந்த, பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரது ஆட்டத்தை பார்ப்பதை விட, போட்டிகளின்போது, இவர் அணிந்து வரும் உடைகளை பார்ப்பதற்காகவே, ஏராளமான ரசிகர்கள், மைதானத்துக்கு வருவது உண்டு.
பெண்கள் டென்னிஸ் உலகில், உடை விஷயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் என, இவரை கூறலாம். 'டென்னிஸ் விளையாட்டின் இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்' என்ற, குற்றச்சாட்டும், இவர் மீது உள்ளது.
இதனால், போட்டிகளின் போது, உடை விஷயத்தில் தாராளம் காட்ட முடியாமல் போன ஏக்கத்தை, சமீபத்தில், அமெரிக்காவின் மியாமி பீச்சுக்கு சென்று, ஆசை தீர நிறைவேற்றியுள்ளார் செரீனா. போட்டோகிராபர் மற்றும் உதவியாளர் சகிதம், பீச்சுக்கு சென்ற செரீனா, விதம் விதமான, 'பிகினி' உடைகளை அணிந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததோடு, அதை, இணையதளத்திலும் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
'எனக்கு, 31 வயதாகி விட்டதாக கூறுகின்றனர். ஆனால், என் உடல் அமைப்பை பார்த்தால், அப்படி தெரியவில்லை தானே...' என, சமூக வலைத் தளத்தில், 'டுவிட்' செய்து, தன் ரசிகர்களுக்கு, குஷியை ஏற்படுத்தியுள்ளார்.
— ஜோல்னா பையன்.

