
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எங்கே இருக்கிறது?
* எங்கே இருக்கிறது
எதில் இருக்கிறது
மனிதன் தேடி அலைகிற
மகிழ்ச்சி...
* பேராசை
முடிகிற போது
பேரின்பம்
தொடர்கின்றன!
* போதும் என்ற
மனதில் தான்
புன்னகை மலர்கள்
மலர்கிறது!
* தட்டிப் பறிப்பதில்
இல்லை...
விட்டுக் கொடுப்பதில்
இருக்கிறது
நிம்மதி!
* 'நான்,
எனது' என்ற
சுயநலத்தை
துறந்த மனமே
பேரின்பத்தில்
திளைக்கிறது!
* எங்கே...
எதில் இருக்கிறது
மனித மனம்
தேடி அலைகிற
மகிழ்ச்சி!
* பணத்தில்
இல்லை...
பதவியில்
இல்லை
பொன்னிலும்
மண்ணிலும்
இல்லவே இல்லை!
* வேறெங்கும் இல்லை...
மனிதன் தேடும் மகிழ்ச்சி
அவனின்
மனதுக்குள் தான்
இருக்கிறது!
— நெப்போலியன், சென்னை.

