PUBLISHED ON : ஜூன் 21, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டனில் உள்ள ஒரு பிரபல ஓட்டல், 'பெட் காபி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓட்டலில், நாற்காலிகளுக்கு பதில், ஆடம்பரமான படுக்கைககள் போடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'சிங்கிள்' அல்லது 'டபுள் பெட்'டை தேர்வு செய்யலாம்.
தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்து, படுக்கையில் படுத்தபடியோ, அமர்ந்தபடியோ, குடும்பத்தினருடன் அளவளாவியபடி, 'புல்' கட்டு கட்டி, அங்கேயே, ஒரு குட்டித் தூக்கமும் போடலாம்.
'என்ன செய்வது... போட்டி அதிகமாகி விட்டது; வித்தியாசமாக ஏதாவது செய்தால் தான், தொழிலில் நிலைக்க முடியும்...' என்று கூறுகின்றனர் ஓட்டல் நிர்வாகத்தினர்.
— ஜோல்னாபையன்.