/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கின்னஸ்சில் இடம் பிடிக்கும் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா!
/
கின்னஸ்சில் இடம் பிடிக்கும் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா!
கின்னஸ்சில் இடம் பிடிக்கும் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா!
கின்னஸ்சில் இடம் பிடிக்கும் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா!
PUBLISHED ON : ஜூன் 21, 2015

எந்த மதத்தினராக இருந்தாலும், மற்ற மத நம்பிக்கைகளை மதிப்பது உயர்ந்த குணம். கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் ட்ரான்ஸ்பெர்சனல் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியை டயான் - இ - ஜானட் என்பவர், கல்வி ஆராய்ச்சிக்காக அடிக்கடி கேரளா வருவார். அப்போது, திருவனந்தபுரத்தில் நடைபெறும், ஆற்றுகால் பொங்கால (பொங்கல்) விழாவைக் கண்டு ஆச்சரியமடைந்தவர்,'ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள், சாலையோரம் அடுப்புகள் மூட்டி, ஆற்றுகால் பகவதிக்கு பொங்கல் படைப்பது அற்புத காட்சி; இந்த வியப்பூட்டும் நிகழ்ச்சி, ஏன் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெறக் கூடாது...' என்று யோசித்தவர், இதுபற்றி கின்னஸ் புத்தக நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பினார். அத்துடன், கிறிஸ்துவ பெண்மணியான இவரும், சாலையோரம் பொங்கல் படைத்து, ஆற்றுகால் தேவிக்கு வழிபாடு செய்து மகிழ்ந்தார். மற்ற மதங்களை மதிக்க தெரிந்த இவரை, நாமும் பாராட்டுவோம்!
— ஜோல்னாபையன்.