PUBLISHED ON : ஆக 18, 2019

அ நிறம் | அளவு
இலங்கை வாசம் முடிந்து வந்த, சீதாவை, ராமர் கைவிட்டபோது, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் அடைக்கலம் ஆனாள்.
படத்தில், பெண் கும்பிடும் இடம், உ.பி., மாநில தலைநகரான, கான்பூரில், பிட்டூர் என்ற கிராமத்தில் இருக்கிறது, வால்மீகி கோவில். இந்த இடத்தில் தான் பூமி பிளந்து, சீதா, சங்கமமானாள் என்று புராணம் கூறுகிறது.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால், நகர நாகரிகம் இங்கு இல்லை; தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ கூட கிடையாது.
இங்குள்ள, வால்மீகி சிலையை வணங்கிய பின், சீதா மறைந்த இடத்துக்கு வந்து கும்பிடுகின்றனர்.
சீதாவின் மகன்களான, லவ - குசா, இங்கு தான் வளர்ந்ததாகவும், இங்குள்ளோர் நமபுகின்றனர்.
- ஜோல்னாபையன்.
