
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்காசிய நாடான, ஜார்ஜியாவைச் சேர்ந்த, லைசா ப்ரூஸ் என்ற, 10 வயது சிறுமி, ஜிம்னாஸ்டிக் ஆர்வலர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
கடுமையான உடற்பயிற்சிகளின் காரணமாக, இந்த சிறுமியின் உடற்கட்டு, 'சிக்ஸ் பேக்'குடன் அமைந்துள்ளது.
'உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபடுவோருக்கே சாத்தியமாகாத இந்த விஷயம், இந்த சிறுமிக்கு சாத்தியமானது எப்படி...' என, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
இந்த சிறுமி, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. 4 வயதில் இருந்தே, உடற்பயிற்சி மீது தீவிர ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். வாரத்துக்கு, 30 மணி நேரம் உடற்பயிற்சிக்கே செலவிட்டதால், அவரது உடல், இப்படி படிக்கட்டு போல் மாறி விட்டது.
'மிகச்சிறிய வயதில், சிறுமிக்கு, 'சிக்ஸ் பேக்' உடல்வாகு அமைவது, சாதாரண விஷயமல்ல...' என, ஆச்சரியப்படுகின்றனர், உடற்பயிற்சி நிபுணர்கள்.
— ஜோல்னாபையன்