sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திருமலையில் சில ஆச்சரியங்கள்!

/

திருமலையில் சில ஆச்சரியங்கள்!

திருமலையில் சில ஆச்சரியங்கள்!

திருமலையில் சில ஆச்சரியங்கள்!


PUBLISHED ON : அக் 02, 2011

Google News

PUBLISHED ON : அக் 02, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்., 3 - திருப்பதியில் கருட சேவை விழா!

திருமலையில் குடிகொண்டு இருக்கும், திருப்பதி வெங்கடாசலபதி யிக்கு சாத்தப்படும் மேலங்கி, 21 அடி நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட விசேஷ உடை. பட்டு பீதாம்பரம் என்று அழைக்கப்படும் இந்த வஸ்திரம், எந்த கடையிலும் கிடைக்காது; கோவிலில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை, 12 ஆயிரத்து, 500 ரூபாய். இந்தப் பணத்தை கோவில் அலுவலகத்தில் கட்டி விட்டால், உங்கள் சார்பில் வஸ்திரம், வெங்கடாசலபதிக்கு சாத்தப்படும். 'ஓ.கே., பணம் கட்ட நான் தயார்...' என்கிறீர்களா? சாரி... பெருமாள் உங்கள் வஸ்திரத்தை ஏற்க உடனடியாக தயாரில்லை. பணம் கட்டிவிட்டு வரிசையில் காத்திருந்தீர்கள் என்றால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களால் வழங்கப்பட்ட வஸ்திரத்தை, பெருமாள் ஏற்றுக் கொள்ளலாம்.

திருமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு லட்டு, பொங்கல், புளி சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, பாதாம் கேசரி, அதிரசம் உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் சுடச்சுடவும், சுவையாகவும் பிரசாதமாக வழங்கப்படும். ஆனால், மூலவர் வெங்கடா சலபதிக்கு, அன்றாடம் வாங்கப்படும் புதிய மண்சட்டியில் தயார் செய்யப்படும் தயிர் சாதம் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

மூன்று ஆயிரம் அடி உயர மலையில், குளிர் பிரதேசத்தில், அதிகாலை, 4:00 மணிக்கு குளிர்ந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டாலும், அபிஷேகம் முடிந்த பிறகு பெருமாளுக்கு ஏற்படும் வியர்வையை பீதாம்பரத்தால் துடைத்து எடுப்பர்.

பெரும்பாலான கோவில்களில் பகல், 12:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நடை அடைக்கப்படும். பிறகு இரவு, 10:00 மணியளவில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தரிசனம் நடைபெறும். இடைப்பட்ட நேரத்தில் சுவாமியோ, அம்பாளோ ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்; ஆனால், வெங்கடாசலபதியைப் பொறுத்தவரை ரொம்ப பிசி. காலை, 3:30 மணிக்கு பக்தர்களை பார்க்க ஆரம்பித்தால், பின்னிரவு, 3:00 மணி வரை, 'நான்-ஸ்டாப்பாக' அருள்பாலிக்கிறார். ஒரு நாளைக்கு மொத்தமே, அரை மணி நேரம்தான் அவருக்கு ஓய்வு. இவ்வளவு கடினமாக பெருமாள் உழைத்தாலும், விழா நாட்களில் அவரை பார்க்க ஒரு வாரத்திற்கும் கூடுதலாகி விடுகிறது.

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,நேபாளத் திலிருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து மேலும் சில வாசனை திரவியங்கள் என்று, உலகம் முழுவதிலும் இருந்து பெருமாளுக்காக, பக்தர்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவை எல்லாம் அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும். இந்த அபிஷேக நீர், கோவில் அருகில் உள்ள புஷ்கரணி எனப்படும் புனிதநீர் குளத்தில் விடப்படும். இந்த புனிதநீரீல் நீராட, வருடத்திற்கு ஒரு முறை பெருமாள் எழுந்தருளுவார். அந்த விழா, நீராட்டு விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம், பெருமாளுடன் நீராட பல லட்சம் பக்தர்கள் கூடுவர்.

திருப்பதி திருமலையில் உள்ள மூலவர் வெங்கடாசலபதி அணிந்திருக்கும் தங்க, வைர, வைடூரிய நகைகளுக்கு விலை மதிப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர் அணிந்திருக்கும் காசு மாலை மட்டுமே, 12 கிலோ எடை. இதை அணிவிக்க மூன்று அர்ச்சகர்கள் தேவைப்படுவர். இது தவிர பச்சை மரகதம், மிக, மிக அபூர்வமான நீலக்கல் இவைகளை எல்லாம் வரிசையில், மணிக் கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ காத்திருந்து போய் பார்த்தால்தான் பார்க்க முடியும். அதுவும் அந்த, 'ஜருகண்டி... ஜருகண்டி...' தள்ளிவிடலில் இதை எல்லாம் கவனித்து பார்க்க முடியாது.

உற்சவரான மலையப்பசுவாமி இந்த நகைகளை எல்லாம் அணிந்து, வருடத்தில் ஒரு நாள் கோவிலின் மாடவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வலம் வருவார். பிரம்மோற்சவ விழா நாட்களில் ஒரு நாளான அந்த திருநாள் தான், 'கருட சேவை' விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த நாள், அக்., 3ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

பெருமாள் தனக்கு பிடித்தமான கருட வாகனத்தில், பிடித்த நகைகளை எல்லாம் அணிந்து வருவதால், மூலவரே தங்களை நேரில் காண வருவதாக கருதி, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அன்றைய தினம் திருமலையில் திரள்வர்.

***






      Dinamalar
      Follow us