PUBLISHED ON : ஜன 14, 2018

அ நிறம் | அளவு
ஜெர்மனியின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான, பிராங்க்பர்ட்டைச் சேர்ந்த, 56 வயது நபர், 1997 என்ற எண்ணுள்ள தன் காரை, ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றார்.
சில மணி நேரத்துக்கு பின், காரை எங்கே நிறுத்தினோம் என்பது, அவருக்கு மறந்து விட்டது. ஒவ்வொரு இடமாக தேடியும், கார் கிடைக்காததால், போலீசில் புகார் செய்தார்.
போலீசாரும், சில இடங்களில் தேடிவிட்டு, முயற்சியை கைவிட்டனர். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில், அந்த கார், ஒரு பாழடைந்த கட்டடம் அருகே நின்றிருப்பதைக் கண்டுபிடித்தனர், போலீசார்.
தற்போது, அந்த கார், அந்த முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இப்போது, 76 வயதாகி விட்டது. கார், இப்போது இயங்கும் நிலையில் இல்லை.
— ஜோல்னாபையன்.
