தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முருங்கைக்கீரை!

முருங்கைக்கீரை!

முருங்கைக்கீரை!


PUBLISHED ON : ஜூலை 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருங்கைக்காய் போன்றே, முருங்கை கீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்தில் இரு முறையாவது இதை உணவில் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலுப்பெறும். மேலும், உடல் சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை மற்றும் கண் நோய் போன்றவற்றை நீக்கும்; ரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், உடல் மெலிந்து இருப்போர், உணவில் இதை சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

ஒன்பது முட்டை, அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் எட்டு டம்ளர் பாலில் அடங்கியிருக்கும், விட்டமின், 'ஏ' சத்து, ஒரு கிண்ணம் முருங்கை சாறிலேயே கிடைக்கும். இது, வயிற்று புண்ணை குணமாக்கும்; மல சிக்கலை நீக்கும்; தேவையில்லாத நீர்களை பிரித்து விடும். சிறுநீரை பெருக்குவதால், உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள், பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.

உடல் சூட்டை குறைத்து, சருமத்தை பளபளக்க வைக்கும். கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். இளநரையை போக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும். உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us