PUBLISHED ON : ஜூலை 10, 2016

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்; இது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர விசுவாசிகள் செய்யும் சேட்டைக்கு, அளவு இல்லாமல் போய் விட்டது.
ரஷ்யாவின், சிபிரியா மாகாணத்தில் உள்ள கிரஸ்னோயார்க்ஸ் என்ற நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், ரஷ்ய அதிபரின் தீவிர விசுவாசி. புடினை பெருமைப்படுத்தும் வகையில், அந்த நகரில் பிரமாண்டமான ஓட்டலை கட்டியுள்ளார்.
அந்த ஓட்டலில் திரும்பும் இடமெல்லாம், புடினின் மெழுகுச் சிலைகளும், புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், டாய்லெட் பேப்பரில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்கர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனரோ தெரியவில்லை.
— ஜோல்னாபையன்.
