PUBLISHED ON : ஜூலை 10, 2016

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதுமையான யுக்திகளை கையாளுகிறது.
சமையல், குளியல் அறை மற்றும் கழிப்பறையில் உள்ள பொருட்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு முன், அந்த பொருட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை, வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.
குறிப்பாக, குளியல் அறையில் உள்ள, 'ஷவர்' எப்படி இயங்குகிறது என்பதை, வாடிக்கையாளர்கள் குளித்து பார்த்த பின், அவற்றை வாங்கலாம்.
படுக்கை, தங்களுக்கு பிடித்தது போல் உள்ளதா என்பதை, அங்குள்ள படுக்கை அறைக்கு சென்று, படுத்து பார்த்து வாங்கலாம். இதற்காக, பிரமாண்டமான குளியல் அறை, கழிப்பறை, சமையல் அறை மற்றும் படுக்கை அறை ஆகியவை, இந்நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ளன. 'போட்டி அதிகமாகி விட்டது; அதை சமாளிப்பதற்காக இதுபோன்ற புது யுக்திகளை கையாளுகிறோம்...' என்கின்றனர், நிறுவனத்தின் உரிமையாளர்கள்.
— ஜோல்னாபையன்.
