/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அன்று விளையாட்டு வீரர், இன்று சமையல்காரர்!
/
அன்று விளையாட்டு வீரர், இன்று சமையல்காரர்!
PUBLISHED ON : நவ 11, 2018

படத்தில் இருப்பவர், 53 வயதான, தேசிய முன்னாள் கூடைப்பந்து வீராங்கனையான, கே.கிருஷ்ணம்மா. தற்போது, கேரளாவில், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், சமையற்காரராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், கேரளாவில் பெய்த கடும் மழையில், இவர் வீடு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. இதனால், மூன்று குழந்தைகள் மற்றும் உடல் நலமில்லாத கணவருடன், நிவாரண முகாமில் தங்கியிருந்தார்.
அப்போது, அங்கு தங்கியிருந்த சிறுவர்களுடன் கூடைப்பந்து விளையாடினார். இவரது படம், வலை தளத்தில் வெளியாக, இப்போது, இவருக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன் வந்துள்ளனர்.
அதில், கேரள மாநில முன்னாள் வீரர் மற்றும் வீராங்கனைகளை அடங்கிய, 'டீம் ரீபண்டு' என்ற குழு, பலரிடம் வசூல் செய்த, மூன்று லட்ச ரூபாயை, கிருஷ்ணம்மாவுக்கு கொடுத்துள்ளது.
— ஜோல்னாபையன்.

