தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உளவு பார்க்கும் மீன்!

உளவு பார்க்கும் மீன்!

உளவு பார்க்கும் மீன்!


PUBLISHED ON : ஆக 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்டை நாடுகளுக்கு தொல்லை கொடுப்பதில், சீனர்களை யாரும் மிஞ்ச முடியாது. 'ட்ரோன்' எனப்படும் ஆள் இல்லா குட்டி விமானங்களை ஏவி, பக்கத்து நாடுகளின் ராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பதில் கில்லாடிகள், சீனர்கள்.

ஆகாய மார்க்கமாக செய்யும் இந்த சேட்டையை, இனி நீர் மார்க்கமாகவும் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக குட்டி விமானத்துக்கு பதிலாக, மீன் வடிவிலான ட்ரோனை தயார் செய்துள்ளனர்.

இந்த மீனின் கண் மற்றும் வாய் இருக்கும் இடங்களில் சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீன் போல வளைந்து நெளிந்து, அண்டை நாடுகளின் கடல், நதி உள்ளிட்ட நீர்பரப்பிற்குள் சென்று, இந்த கருவி, துல்லியமாக படம் பிடித்து, தங்கள் எஜமானர்களுக்கு அனுப்பும்.

இந்த செயற்கை மீன் வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி, தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் வரை செயல்படுமாம்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us