PUBLISHED ON : ஜூலை 17, 2022

அ நிறம் | அளவு
நம் அண்டை நாடான சீனாவின் சிசுவான் மாகாணத்தில் உள்ள, செங்டு நகரைச் சேர்ந்த தொழில் அதிபர், லியான் ஷி. இவருக்கு, 55 வயதாகிறது. இப்போது, தொழில் அதிபராக இருந்தாலும் இளமைப் பருவத்தில் வறுமையில் வாடியவர்.
இதனால், இவரால் பட்டப்படிப்பு படிக்க முடியாமல் போனது. இந்த ஆசையை நிறைவேற்ற, சிச்சுவான் பல்கலையில் பட்டப்படிப்பில் சேருவதற்காக, இதுவரை, 25 முறை நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், தேர்ச்சி பெறவில்லை.
ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல், இப்போது, 26வது முறையாக நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
'எப்படியாவது ஒரு, 'டிகிரி' வாங்கி விட வேண்டும் என்பதே என் லட்சியம். அப்போது தான் இந்த கட்டை வேகும்...' என்று, யதார்த்தமாக பேசுகிறார், லியான் ஷி.
ஜோல்னாபையன்
