தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தவிக்கிறேன்! (கவிதைச் சோலை)

தவிக்கிறேன்! (கவிதைச் சோலை)

தவிக்கிறேன்! (கவிதைச் சோலை)


PUBLISHED ON : ஆக 08, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பள்ளி விடுமுறையில்

கட்டிய மணல் வீட்டில்

காதலை நாம்

குடியேற்றவில்லை...

* பக்கத்து ஊர்

மேல்நிலைப் பள்ளிக்கு

ஒரே சைக்கிளில்

சேர்ந்து சென்றபோது

காதலும், 'கேரியரில்'

அமர்ந்து வந்திருக்கலாம்...

* 'பயாலஜி' பாடம்

பிராக்டிகலுக்கு...

எனக்காக நீ

எலி பிடித்தாய்...

பூப்பறித்தாய்...

படம் வரைந்தாய்...

* எலியும்... பூவும்...

படமும்... என்

நெஞ்சினுள்

நிழலாடியது...

இரவு முழுக்க

உன் நினைவுகளில்

உறவாடியது...

* வேறு வேறு

கல்லூரிகளுக்கு

இடம் பெயர்ந்த போதும்

இடம் பெயரவில்லை

என் மனதில் காதல்...

* இடமாற்றத்தில் நீ

தடுமாறி விட்டாய்...

தடம் மாறி விட்டாய்...

விசாரித்ததில்... உன்

வகுப்புத் தோழி

நெருக்கத்தில்... நீ

என்னை மறந்தது

தெரிய வந்தது...

* காதல் கனவுகளுடன்

கால் வைத்த பூக்காடு

உன்னால் - கருகி

நெருஞ்சி முள் காடானது...

* நெஞ்சம் முழுக்க

நேசத்துடன் - நான் கொண்ட

உன்னுடனான காதல்

நெருஞ்சி முள் காட்டில்

கால் வைத்த

கதையாகிப் போனது...

* என்னால்

வைத்த அடியை

எடுக்கவும் முடியவில்லை...

அடுத்த அடியை

வைக்கவும் முடியவில்லை...

ரத்தம் வழியும்

ரணமான பாதங்களுடன்...

* தவிக்கிறேன் நான்...!

— க.ரஞ்சனா, கோவை.

* * *



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us