
* ஒரு கைப்பிடி சீரகத்துடன், தேங்காய் பால் சேர்த்து நைசாக அரைத்த விழுதை, உடலில் தடவி வந்தால், வெயில் காலங்களில் ஏற்படும் கொப்புளங்கள் குணமடையும்.
* வெயில் காலங்களில், உஷ்ணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்க, பொரித்த உணவு வகைகள், அசைவம் மற்றும் மசாலா கலந்த உணவுகளை தவிர்க்கவும்.
* முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை, மறுநாள் காலை, மிக்சியில் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணி நேரம் ஊறிய பின் குளித்தால், உடல் சூடு குறையும்.
* வெயிலில் சென்று வந்தால், சிலருக்கு கண்கள் சிவந்து விடும். சுத்தமான பன்னீரில், பஞ்சை நனைத்து ஒத்தடம் கொடுத்தால், சிவப்பு மறையும்.
* பெரிய நெல்லிக்காயை நறுக்கி, வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும், பொடியாக்கி, பச்சடி செய்து சாப்பிட்டால் குளுமையாக இருக்கும்.
* வெயிலால் உண்டாகும் உஷ்ணத்தை குறைக்க, உங்கள் கை பையில், தொப்பி, குடை, 'சன் கிளாஸ்' மற்றும் தண்ணீர் பாட்டில் இருப்பது அவசியம்.