sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சம்மர் டூர்

/

சம்மர் டூர்

சம்மர் டூர்

சம்மர் டூர்


PUBLISHED ON : ஏப் 14, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 14, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர் அல்லது உறவினர், இந்தியா வந்து சுற்றுலா செல்ல விரும்பினால், 'இண்ட்ரயில் பாஸ்' என்று இருக்கிறது. அரை நாள் முதல், 90 நாட்கள் வரை, இந்திய ரயில்வேக்களில், எந்த நிலையத்திலிருந்தும் ஏறலாம் - இறங்கலாம்; முன்பதிவு தேவையில்லை. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு என, தனி, 'கவுன்ட்டர்' உள்ளது. முதல் மற்றும் குளிர்சாதன வகுப்பில் பயணிக்க அருமையான வாய்ப்பு.

* வரவு - செலவு விபரங்களை யாரேனும் ஒருவர் பொறுப்பேற்று, அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டால், வீட்டிற்கு வந்தவுடன் கணக்கு பார்க்க உதவியாக இருக்கும்.

* சுற்றுலா செல்லும்போது, கூடுமானவரை தங்க நகைகளை அணிந்து செல்லாதீர். அதேபோல், வீட்டிலும் வைத்துச் செல்லாதீர். வங்கி, 'லாக்கரில்' வைத்துச் செல்லலாம்.

* ரயிலில் பயணிக்கும்போது, சுடிதார், புடவை அணிந்திருப்போர், அதன் மேல், 'நைட்டி'யை அணிந்துகொண்டால், இரவில் நம்மையறியாமல் துணி விலகி விடுமோ என்ற பயமின்றி, நிம்மதியாக துாங்கலாம்.

* எந்த பையில், என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை, ஒரு காகிதத்தில் எழுதி, கைப்பையில் வைத்துக் கொண்டால், பதற்றம் இல்லாமல் எடுக்க முடியும்.






      Dinamalar
      Follow us