PUBLISHED ON : அக் 18, 2020

* பச்சை பயறு, காராமணி சுண்டல்களுக்கு, வெல்லமும், தேங்காய் துருவலும்; கொண்டைக் கடலைக்கு, காரப்பொடியும் சேர்த்தால், ருசி அலாதியாக இருக்கும்
* கடலையை வேக வைக்கும்போது, சோடா உப்பு சேர்க்கக் கூடாது
* சுண்டல் வகைகளை வேக வைக்கும்போதே உப்பு சேர்த்தால், சில சமயம் சுண்டல் நறுக் நறுக்கென்று இருக்கும். இதற்கு, சுண்டலை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன், துாள் உப்பை போட்டு நன்கு கிளறலாம்; சுண்டல் மெத்தென்று இருக்கும்
* வெந்த சோயா பீன்சுடன், வதக்கிய குடைமிளகாய், துருவிய சீஸ் சேர்த்தால், குழந்தைகளுக்கு பிடித்த சுண்டல் தயார்
* வெந்த அமெரிக்கன் சோளத்தில், சிறிதளவு மிளகாய்த் துாள், தேங்காய் துருவல் சேர்த்தால், வித்தியாசமான சுண்டல் தயார்
* 'கொலஸ்ட்ரால்' பிரச்னை இருப்பவர்களுக்கு, தேங்காய் துருவல் சேர்க்காத சுண்டலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
