தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கொலு டிப்ஸ்...

கொலு டிப்ஸ்...

கொலு டிப்ஸ்...


PUBLISHED ON : அக் 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கொலுக்கு சில தினங்கள் இருக்கும்போது, பொம்மைகளை எடுத்து துடைத்து வையுங்கள். உடைந்திருக்கிற பொம்மைகளை சரி செய்யுங்கள். உதாரணத்துக்கு ஒரு பொம்மையின் மூக்கு உடைந்திருக்கிறது என்றால், 'ஒயிட் எம்சீல்' கொஞ்சம் உருட்டி, அந்த இடத்தில் மூக்கு போல ஒட்டி வையுங்கள்

* பழைய பொம்மைகளுக்கு, 'பேப்ரிக் பெயின்ட்' அடித்து, அதன் மீது, 'ப்ளைன் வார்னிஷ்' போட்டு வையுங்கள்

* பெண் பொம்மைகளின் நகை, புடவை பார்டர் போன்றவற்றிற்கு, கோல்டன் கலர் பெயின்ட் அல்லது கோல்டன் பவுடர் போட்டு புதுப்பித்து வையுங்கள். பொம்மைகளின் புடவைகளுக்கு கல் பதித்து மெருகேற்றலாம்

* யார் யாரை கூப்பிடப் போகிறோம் என்ற, பட்டியல் தயார் செய்து, அவர்களின் போன் நம்பரை முன்னரே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

* உங்கள் வீட்டு குழந்தைகள் வாங்கிய பரிசுப் பொருட்களை கூட, கொலு படியில் வைக்கலாம். இதுவும் அவர்களை ஊக்கப்படுத்தும்

* வருகிறவர்களுக்கு சுண்டல் போட்டுக் கொடுக்க, 'கப், பேப்பர் பிளேட், ஸ்பூன்' போன்றவற்றை, எந்த அளவுக்கு தேவைப்படும் என்று, கணக்கு போட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us