PUBLISHED ON : ஜூன் 06, 2021

அ நிறம் | அளவு
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், பார்லிமென்ட் கட்டடம் அருகே, பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது, ஆகாய நீச்சல் குளம். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடுவில், தரையிலிருந்து, 35 மீட்டர் உயரத்தில், கண்ணாடி தொட்டியில், இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கட்டடம் மற்றும் லண்டன் நகரின் முழு அழகையும், கண்ணாடி தொட்டியில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீருக்குள் நீச்சலடித்தபடியே பார்த்து ரசிக்கலாம்.
மன உறுதியும், துணிச்சலும் உள்ளவர்கள், கணிசமான கட்டணம் கொடுத்து, ஆகாயத்தில் நீச்சலடிக்கலாம்.
ஜோல்னாபையன்
