தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/புளி அவல்!

புளி அவல்!

புளி அவல்!


PUBLISHED ON : டிச 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், புளிக்கரைசல் - ஒரு கப், தனியா - இரண்டு தேக்கரண்டி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு மேஜை கரண்டி, காய்ந்த மிளகாய் - ஆறு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெந்தயம் - அரை தேக்கரண்டி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி, வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் - ஒரு மேஜை கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அவலைக் கழுவி, புளிக்கரைசலில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயம் போன்றவற்றை வறுத்து, பொடி செய்து, அவலுடன் சேர்க்கவும். பின், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் பொடித்த வெல்லம் போன்றவற்றை சேர்த்து, ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us