PUBLISHED ON : டிச 18, 2016

* குளிர்காலத்தில் அடிக்கடி, ஷாம்பூ போடுவதை தவிர்த்து, வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டும், தலைக்கு குளியுங்கள்.
* குளிர்காலத்தில், ஆவி பறக்க பறக்க, வெந்நீரில் குளித்தால், முடியின் வேர்க்கால்கள் சேதமாகி, வறண்டு போகும்; எனவே, இளம் சூடான நீரையே, தலைக்கு பயன்படுத்துங்கள்.
* 'ஹெர்பல் ஆயில்' கொண்டு, உச்சந்தலையிலிருந்து, முடிநுனி வரை, 'மசாஜ்' செய்வதால், முடியின் வறட்டு தன்மை நீங்கி, அடர்த்தியாக வளரும்.
* முடியை இறுக்கி, ஜடை போடாமல், லுாசாக கட்டிக்கொண்டால், முடிக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, வறண்டு போகாமலும், உடையாமலும் நன்கு வளரும்.
* இந்த சீசனில், பொதுவாகவே தலைமுடி உடையும் என்பதால், பின்பக்கமாயிருந்து முன்னோக்கி வாருவதை தவிருங்கள். மேலும், குளிர்காலத்தில், பொடுகு தொல்லை ஏற்படும். இதைத் தவிர்க்க, நல்லெண்ணெய், 100 மில்லியுடன், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மூன்று துளி கலந்து, உச்சந்தலையில் தேய்த்து, நன்றாக, 'மசாஜ்' செய்து கொள்ளவும். சிறிது நேரம் ஊற வைத்து, பொடுகு ஷாம்பூ கொண்டு, முடியை அலசவும்
