தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்!


PUBLISHED ON : ஏப் 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பலாப் பழ பாயசம்!

தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப், பாசிப் பருப்பு - அரை கப், இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும்; வெல்லம் - 2 கப், தேங்காய் - 1, துருவி, கெட்டி பால் எடுக்கவும். பலாப்பழம் - 10 சுளை எடுத்து, பொடிப் பொடியாக நறுக்கவும். நெய், ஏலக்காய் - தேவைக்கேற்ப. சுக்குப் பொடி - அரை தேக்கரண்டி.

செய்முறை: குக்கரில் அரிசி, பாசிப் பருப்பு, பொடியாக நறுக்கிய பலாப்பழம் போன்றவைகளை ஒன்றாக போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெல்லம் சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும். இதில், வேக வைத்துள்ளதை சேர்த்து கிளறவும். ஒரு கொதி வந்ததும், அடுப்பை, 'சிம்'மில் வைத்து கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். அத்துடன் நெய், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.

பலாப்பழ பாயசம் ரெடி

வேப்பம்பூ பச்சடி!

தேவையான பொருட்கள்: வேப்பம்பூ - ஒரு கைப்பிடி அளவு, மாங்காய் துண்டுகள் - 2, வெல்லம் - 5 கிராம், பச்சை மிளகாய் சிறியது - 1, கடுகு - அரை தேக்கரண்டி, எண்ணெய் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காய் துண்டுகளை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும்.

வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்து விடவும். பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

'வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது...' என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப் புத்தாண்டு அன்று, முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.

பானகம்!

தேவையான பொருட்கள்: வெல்லம் - கால் கிலோ, தண்ணீர் - 3 கப், ஏலக்காய் - கால் தேக்கரண்டி, சுக்குத் துாள் - 1 சிட்டிகை, எலுமிச்சம்பழம் - 2, பச்சைக்கற்பூரம் - சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து வடி கட்டவும். ஏலக்காய்த்துாள், சுக்குத்துாள், பச்சைக் கற்பூரம் சேர்த்து கலக்கவும். எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us