PUBLISHED ON : டிச 19, 2021

அ நிறம் | அளவு
பழங்கால கோவில்கள் பெரும்பாலானவை, மன்னர் காலங்களில் கட்டப்பட்டவை என்பதால், அவர்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆனால், ஒரு கோவில் மட்டும் அதை உருவாக்கிய சிற்பியின் பெயரில் அழைக்கப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவிலுக்கு, அதன் தலைமை சிற்பி ராமப்பா பெயர் சூட்டப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், வாரங்கல்லிலிருந்து, 80 கி.மீ., தொலைவில் வெங்கடப்பூர் மண்டல் என்ற கிராமத்தில் இருக்கும் கோவில் தான், அது. ராமப்பா என்ற தலைமை சிற்பி, தன் குழுவினருடன் சேர்ந்து, இந்த கோவிலை உருவாக்க, 40 ஆண்டுகள் ஆனதாம். அந்த அளவுக்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில் இது என்கின்றனர்.
— ஜோல்னாபையன்
