PUBLISHED ON : டிச 19, 2021

அ நிறம் | அளவு
கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து 12 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, வெள்ளையானை காயல் என்ற நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்தில், ஆயிரக்கணக்கான தாமரை மலர்கள் பூத்து குலுங்கி பார்ப்போரை சுண்டி இழுக்கிறது.
சமீப காலங்களில், பா.ஜ., கட்சி கூட்டங்கள் நடக்கும் போது, தலைவர்களுக்கு தாமரைப்பூ மாலை அணிவிப்பது பிரபலமாகி உள்ளது. இதை பயன்படுத்தி, இந்த நீர்த்தேக்க பகுதியில் உள்ள பூக்கடைக்காரர்கள், தாமரை மலர்களை பறித்து விற்பனை செய்து, 'கல்லா' கட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளுக்கும் தாமரைப் பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர்.
இங்கு பூக்கும் தாமரைப் பூக்கள் அழகாகவும், நல்ல நிறமாகவும் இருப்பதால் அமோக வரவேற்பும் பெற்றுள்ளது.
