PUBLISHED ON : நவ 26, 2017

அ நிறம் | அளவு
அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில், சமீபத்தில், அழகான பறவை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தில், பெரும் செல்வந்தர்கள் எட்டு பேர் கலந்துகொண்டனர்.
மூன்று லட்சம் ரியால் தொகைக்கு ஆரம்பமான ஏலம், ஏழு லட்சம் ரியாலில் முடிவடைந்தது. அதாவது, 1.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 'வாஹ்ஷ்' இனத்தை சேர்ந்த இப்பறவையை அழகுபடுத்துவதற்கான ஆபரணங்கள் மற்றும் தலைக் கவசத்தின் விலை ஐந்து லட்சம் ரியால். அதாவது, 88 லட்சம் ரூபாய். இந்த பறவை கையில் நிற்பதற்காக தயாரிக்கப்பட்ட கை உறையின் விலை மட்டும், 4,400 ரூபாய்!
'இந்த பறவையை வீட்டில் வைத்திருப்பது கவுரவமானது...' என்கிறார், ஏலத்தில் எடுத்த செல்வந்தர்.
— ஜோல்னா பையன்.
